மயிலாடுதுறையில் மழையில் நனைந்தபடி சாலையில் இருந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து குடும்பத்தாரிடம் ஒப்படைத்த நெகழ்ச்சி சம்பவம் பாரதி மோகன் அறக்கட்டளை சேர்ந்தவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மயிலாடுதுறை காந்தி நகர் பகுதியில் சுமார் 70 வயது மதிப்பதக்க மூதாட்டி சாலையில் தார்பாய் போத்திக்கொண்டு பல மாதங்களாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மூதாட்டி ஒருவர் மழையில் நனைந்தபடி சாலையில் இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் பாரதி மோகன் அறக்கட்டளைக்கு தகவல் தெரிவித்துள்ளனர் பாரதி மோகன் அறக்கட்டளை சேர்ந்தவர்கள் தார்ப்பாய் போர்த்தியபடி சாலையில் இருந்த மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர் மருத்துவமனையில் அனுமதித்த சிகிச்சை வீடியோவை பாரதிமோகன் அறக்கட்டளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர் இதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் பூமாலை கிராமத்தை சேர்ந்த மூதாட்டி என தெரியவந்தது அதன் பிறகு மூதாட்டி உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து பார்த்தனர் பின்னர் மூதாட்டி பெயர் தமிழ்மணி என தெரியவந்தது பின்பு சிகிச்சையில் உள்ள மூதாட்டியை உறவினரிடம் ஒப்படைத்தனர். தமிழ்மணி மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்து உறவினர்களிடம் ஒப்படைத்த சம்பவம் பாரதி மோகன் அறக்கட்டளை குழுவினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.