மயிலாடுதுறை மாவட்டம் குளிச்சார் ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித் தருமாறு கேட்டு அப்பகுதியை சேர்ந்த இளைஞர் தமிழ்மணி என்பவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்திடம் மனு அளித்தார். அதில் குளிச்சார், மன்னம்பந்தல், அகரக்கீரங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் இருந்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் சர்க்கரை நோய் உயர்ரத்த அழுத்தம் நோய் மற்றும் நாய்கடி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு அவசர தேவைகளுக்கும் 35 கிலோமீட்டர் தூரம் உள்ள காளி ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழல் இருப்பதாகவும், இதனால் கருச்சிதைவு ஏற்படுவதாகவும் அங்கு சென்று வர மிகவும் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
பேட்டி:- தமிழ்மணி – குளிச்சார்.
