மயிலாடுதுறையில் பாமக தொண்டர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்

பாமக நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்து சந்தித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தி மயிலாடுதுறையில் பாமக தொண்டர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளதாக சாலை ஓரத்தில் அமர்ந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்:-

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ்சும் அன்புமணி ராமதாஸ்சும் கட்சியில் எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வரும் நிலையில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரும் இணைந்து நேரிடையாக சந்தித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தி பாமக தொண்டர் ஒருவர் மயிலாடுதுறை கிட்டப்ப அங்காடி முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடிகளை இரண்டு கைகளிலும் ஏந்தியவாறு சாலை ஓரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கட்சியில் 46 ஆண்டு காலம் அடிப்படை தொண்டராக உள்ளதாகவும் பாமக நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாசுடன் ஐந்து முறை தான் சிறை சென்றுள்ளதால் தன்னை சிறைப்பறவை சாமிநாதன் என்று அழைப்பார்கள் என்றும் கூறிய சாமிநாதன் தலைவர்கள் இருவரும் பேசாமல் இருப்பது மனவேதனையை ஏற்படுத்துவதாகவும் இருவரும் சந்தித்து பேச வேண்டும் என்பதற்காகவே சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரிடம் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தி உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்திய நிலையில் அவர் மறுக்கவே கைது செய்வதாக கூறி சாமி நாதனை கைது செய்து போலீசார் அழைப்பு சென்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version