மயிலாடுதுறையில் உலகப் புகழ்பெற்ற காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து காவிரியில் நீராடி வழிபாடு :-
மயிலாடுதுறை நகரில் காசிக்கு இணையான காவேரி துலா கட்டம் அமைந்துள்ளது. 16 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ள இப்பகுதியில் புனித நீராடுவது சிறப்பம்சமாகும். மறைந்த முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளயபட்சம், மத்தியாஷ்டமி உள்ளிட்ட காலங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் செய்வதால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் இன்று
ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை முதல் ஏராளமான பக்தர்கள் காவிரி துலா கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். காவிரி கரையில் சிறப்பு பூஜைகள் செய்து ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து காவிரியில் நீராடி வழிபாடு செய்தனர்.
