மனைவி உயிரோடு இருக்கும் பொழுது இரண்டாவது திருமணம் செய்த கணவர் மீது செம்பியம் காவல் நிலையத்தில் முதல் மனைவி பரபரப்பு புகார்
சென்னை பெரம்பூர் தீட்டி தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீவித்யா இவருக்கு விஜயகுமார் என்பவருடன் திருமணம் ஆகி பதினோரு வருடங்கள் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில்
தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் இதற்கு தனது மாமியார் மற்றும் மாமனார் உடந்தை என்றும் செம்பியம் அனைத்து மகளிர் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
தன் கணவருக்கு தனது மாமியார் மற்றும் மாமனார் வேறொரு பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்ததோடு அந்தப் பெண் கர்ப்பமான பொழுது அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியின் நடத்தி வைத்ததாகவும் கூறி வளைகாப்பு புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார்
சென்னை மூலக்கடை பகுதியில் வி ஜே எலெக்ட்ரிக்கல்ஸ் என்ற பெயரில் ஏசி பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் விஜயகுமார் ஸ்ரீவித்யா என்பவரை காதலித்து 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து உள்ளார் இந்த தம்பதி இருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்
இந்த நிலையில் விஜயகுமார் நடத்தி வரும் கடையின் கட்டிடத்தில் உரிமையாளரின் மகளை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது மேலும் தனக்கு திருமணமாகி தனது மனைவி தன்னை விட்டுச் சென்றுள்ளதாக கூறி இரண்டாவது அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது மேலும் இரண்டாவதாக திருமணம் செய்த அப்பெண்ணை தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வருகிறார் இதற்கு ஸ்ரீவித்யாவின் மாமியார் மற்றும் மாமனார் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவித்யாவின் மாமியார் மற்றும் மாமனார் தனது கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த பெண்ணிற்கு சீமந்தம் செய்து வைத்த புகைப்படத்தையும் வெளியிட்டு செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகார் பெற்றுக் கொண்ட செம்பியம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தனக்கு துரோகம் செய்த தனது கணவர் மாமியார் மாமனார் ஆகியோரை கைது செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண் ஸ்ரீவித்யா செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கோரிக்கை வைத்துள்ளார் மேலும் புகார் அளித்து நான்கு நாட்கள் ஆகியும் விசாரணை என்ற பெயரில் தன்னை அழகளிப்பதாகவும் தன் கணவரையோ அல்லது மாமனார் மாமியார் மாமனாரையோ எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார்
