மது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களினால் ஏற்படும் பேராபத்துகளை விளக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழிப்புணர்வு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தியிலிருந்து நடராஜபுரம் வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களினால் ஏற்படும் பேராபத்துகளை விளக்கி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதைப் பொருள்களுக்கு எதிராக முழக்கமிட்டவாறு சென்றனர். கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட நடராஜபுரம் ராஜேஷின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி போதைப் பொருள்களுக்கு எதிராக நடைபெற்ற அணிவகுப்பு பேரணியில் ராஜேஷின் உருவப்படத்தை கையில் ஏந்தியவாறு கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்ற பொதுமக்கள் நடராஜபுரத்தில் அணிவகுப்பு பேரணியை நிறைவு செய்து மறைந்த ராஜேஷுக்கு வீரவணக்கம் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் பாரதி, சாமி சீசர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version