மணல்மேடு அருகே திருச்சிற்றம்பலம் மேலத் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் சக்திசிவன்(17). இவர் நேற்று முன் தினம் மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து திருச்சிற்றம்பலம் மெயின்ரோடு அருகே செல்லும் கும்கி மண்ணியாற்றில் அப்பகுதியில் உள்ளசட்ரஸ் அருகே குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றுநீர் சுழலில் சிக்கி சக்திசிவன் மூழ்கியதை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மணல்மேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சக்திசிவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புகாரின் பேரில் மணல்மேடு காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணியம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து நீரில் மூழ்கி இறந்த சக்திசிவன் உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சக்திசிவன் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. சிவில் பயில அட்மிஷன் ஆகி வரும் 10ந்தேதி முதல் கல்லூரி செல்ல இருந்த நிலையில் ஆடிப்பெருக்கு தினத்துக்கு முதல் நாள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் அனை வரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த் தியுள்ளது.
மணல்மேடு அருகே கும்கி மண்ணி ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
-
By Satheesa

- Categories: News
- Tags: district newstamilnadu
Related Content
பெண்களுக்கு பெருமை சேர்க்கிற, மாநாடாக பாமக &வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் மகளிர் பெருவிழா
By
Satheesa
August 4, 2025
மயிலாடுதுறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர கோரி இளைஞர் மனு
By
Satheesa
August 4, 2025
சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு
By
Satheesa
August 4, 2025
புதிய பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
By
Satheesa
August 4, 2025