பெண்களுக்கு பெருமை சேர்க்கிற, பெண்மையை போற்றுகிற மாநாடாக பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. எல்லா படுகொலைகளுக்கும் எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை மயிலாடுதுறையில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டி:-
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வருகின்ற ஆகஸ்ட் 10-ம் தேதி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக மாவட்ட செயலாளர் பாக்கம்.சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கம் மாநில தலைவர் புதா.அருள்மொழி கலந்து கொண்டு மாநாட்டில் திரளான அளவில் பெண்களை பங்கேற்கச் செய்வது, மாநாட்டுக்கான ஏற்பாடுகள், நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நிர்வாகிகளிடம் எடுத்துக் கூறினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேசிய கௌரவ தலைவர் ஜி.கே.மணி கூறுகையில்; முழுக்க பெண்கள் பங்கேற்கிற, பெண்களுக்கு பெருமை சேர்க்கிற, பெண்மையை போற்றுகிற மாநாடாக இந்த மாநாடு அமையும். போதைப்பொருள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். பெண்களை போற்றுவது, குடும்பத்தின் வாழ்வை மேம்படுத்துவது ஆகியவற்றை மையமாக வைத்து இம்மாநாடு நடத்தப்படுகிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு, எல்லா சமுதாயங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட வேண்டும் போன்ற முக்கிய தீர்மானங்கள் இந்த மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளன. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆகஸ்ட் 10-ம் தேதி மாலை 3 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது. சிறந்த கலைஞர்கள் பங்கேற்கும் கண்ணகி-கோவலன் நாடகம், பெண்களின் பாரம்பரியத்தைப் போன்றுகின்ற வீரதீர சாகச நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தமிழகம் முழுவதிலுமிருந்தும் பெண்கள் அதிக அளவில் பங்கேற்கவுள்ளனர். பாமக தலைவர் அன்புமணி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம். உட்கட்சிப் பிரச்சினைகளை வெளியில் அதிகமாக பேசுவதற்கில்லை. எந்த படுகொலையும் கூடாது என்பதில் பாமக உறுதியாக இருக்கிறது. படுகொலைகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. போதைபொருள், மது பிரதான காரணமாக உள்ளது. இளைஞர்கள் போதையினால் திசை மாறி செல்கின்றனர். எல்லா படுகொலைகளுக்கும் எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார்.
திடிரென கேள்வி கேட்டால் முதலமைச்சருக்கு பதில் சொல்ல தெரியாது என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் குறித்த கேள்விக்கு ஒவ்வொரு கட்சி தலைவர்களும் அவங்க அவங்க நிலைபாட்டில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு கருத்து சொல்றாங்க இன்னொருவருடைய கருத்தில் நாம் விமர்சனம் செய்வது விளக்கம் சொல்வது நல்லதல்ல என்றார். இக்கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ம.கா.ஸ்டாலின், மாநில வன்னியர் செயலாளர் தங்க அய்யாசாமி, தஞ்சை மண்டல பொறுப்பாளர் ஐயப்பன், மகளிர் சங்க மாநில செயலாளர் தேவி குரு செந்தில், வன்னியர் சங்கம் மாவட்ட தலைவர் அருண்குமார், மாவட்ட செயலாளர் முத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினர் பலர் உடனிருந்தனர்.
