மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, மாணிக்கபங்கு ஊராட்சியில் புதுப்பேட்டை மீனவ கிராமம் உள்ளது இக்கிராமத்தில் சுமார் 1213 மீனவர்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் பெரும்பாலமானவர்களுக்கு மீன்பிடித் தொழிலே முக்கிய வாழ்வாதாரமாகும். இந்த கிராமத்தில் சுமார் 7 விசைப்படைகளும், 90 இயந்திரம் பொருத்தப்பட்ட பைபர் படகுகள் உள்ளன கிராமத்தில் மொத்த மீன் உற்பத்தி ஆண்டுக்கு சுமார் 650 மெட்ரிக் டன் ஆகும்.
தற்போது புதுப்பேட்டை மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சுகாதார முறையில் விற்பனை செய்வதற்கும் மற்றும் மீன்பிடி வலைகளை சரி செய்வதற்கும் போதுமான வசதிகள் இல்லாததால் புதுப்பேட்டை மீனவர் கிராம மக்கள் நீண்ட நாட்களாக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களின் கோரிக்கைகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் சட்டமன்றத்தில் முன் வைத்து பேசினார் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள 16 கடலோர மீனவ கிராமங்கள் காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையில் மேம்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் காலநிலை எதிர்கொள்ளும் வகையில் கடற்கரையோர வசதிகளை அமைக்கும் பணிக்கு ரூ. 2 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் ஆரம்பிப்பதற்காக வலை பின்னும் கூடம், மீன் பதப்படுத்தும் கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்து பேசினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மீனவர் கிராம பஞ்சாயத்தார்கள் திமுக ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

