பாண்டூர் கிராமத்தில் உள்ள கொளத்தூர் திரௌபதி அம்மன் கோவிலில் ஆடிப்பூரவிழா. அம்மனுக்கு ஆயிரக்கணக்கான வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை. பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து மாவிளக்கு இட்டு வழிபாடு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கொளத்தூர் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஆடிப்பூர விழா கோலாலமாக கொண்டாடப்பட்டது. மூலவருக்கும் உற்சவருக்கும் ஆயிரக்கணக்கான வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபா ராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மாவிளக்கு தீபமிட்டு சீர்வரிசை எடுத்து வந்து அம்மனுக்கு சமர்ப்பித்து வழிபாடு மேற்கொண்டனர். பக்தர்களுக்கு அம்மனுக்கு சாற்றிய வளையல்கள் மஞ்சள் குங்குமம் பிரசாதங்கள் வழங்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
