நீர்நிலையை பாதிக்கும் சவுடு மண் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு JCP, லாரி உள்ளிட்ட வாகனங்களை சிறைப்பிடித்து கிராம மக்களால் பரபரப்பு

நாகை அருகே நீர்நிலையை பாதிக்கும் வகையில் சவுடு மண் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு ; ஜேசிபி, லாரி உள்ளிட்ட வாகனங்களை சிறைப்பிடித்து வெளியேற்றி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களால் பரபரப்பு.

படக்காட்சிகள் ; சின்னேரி, சிறைபிடிப்பு, போராட்டம், கோஷம், வண்டிகள் வெளியேறுவது.

பேட்டி : சிவராசு, பிரதாபராமபுரம்.

    நாகை மாவட்டம் பிரதாபரமாபுரம் ஊராட்சியில் 3000த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சின்னேரியில் 540 மீட்டர் பரப்பளவில் மண் குவாரி அமைக்க மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக ஜேசிபி இயந்திரங்கள், லாரிகள் மண் எடுக்கும் பகுதிக்கு வந்தது. இதனை அறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களை வெளியேற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் வட்டாட்சியர் கவிதாஸ், கீழையூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் வாகனங்களை சிறைப்பிடித்து கோஷங்களை எழுப்பிய விவசாயிகள், மண் ஏற்றுவதற்கு வந்த வாகனங்களை வெளியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் கருத்துக்கேட்காமல் மண் குவாரி அமைக்க அனுமதி அளித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள கிராம மக்கள், நீர்நிலைகளை பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மண் குவாரி அனுமதியை ரத்து செய்யவேண்டும், தங்கள் பகுதியில் ஒப்புதல் இல்லாமல் குவாரி இனிமேல் அமைக்கக்கூடாது என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    Exit mobile version