பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக கேரளா நம்பூதிரி மற்றும் புரோகிதர்கள், பூஜாரிகள் தலைமையில் நடைபெற்ற தேவப்பிரசன்ன நிகழ்ச்சி.தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்பு.
தமிழகத்தில் நாகர் வழிபாட்டுக்கு எனத் தனியாக அமைந்த கோயில். நாகருக்கென்றே தனிக்கோவில், அதாவது நாகரே மூலவராக வீற்றிருக்கும் கோயில் நாகராஜா கோயில் மட்டுமே.ஒருமுறை தோல் நோயால் பாதிக்கப்பட்ட மார்த்தாண்டவர்மா, நாகராஜா கோயிலுக்கு வந்தார். அவர் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு பூரண குணமடைந்தார். இதனால் மனமகிழ்ந்த அரசன் அந்த இடத்தில் நாகராஜாவுக்கு ஆலயம் எழுப்பினார்.தமிழகத்தில் நாக தோஷ பரிகார தலங்களில் நாகரே மூலவராக வீற்றிருப்பது இங்கு மட்டும் தான். இதனாலேயே பிற மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்குப் பால் ஊற்றி வழிபாடு செய்கிறார்கள். இப்படி சிறப்பு மிகுந்த நாகராஜா கோவிலில்இந்த கோயிலை நாகங்களே பாதுகாக்கின்றன. கருவறையில் நாகராஜர் 5 தலைகளுடன் சுயம்புவாக காட்சியளிக்கிறார். இத்தலத்தில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும் பத்மாவதி என்ற பெண் நாகமும் துவார பாலகர்களாக உள்ளனர்.நாகராஜா கோயிலில் ஆயில்ய நட்சத்திர தினத்தன்று வழிபாடு செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஆயில்ய நட்சத்திர தினத்தன்று முறைப்படி வழிபாடு செய்தால் எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் தீரும் நம்பிக்கை.வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு பின்னர் 2018 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம் நடைபெறவில்லை கும்பாபிஷேகம் பல வருடங்கள் ஆகின்றது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கன்னியாகுமரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் மற்றும் நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ எம் ஆர் காந்தி உள்ளிட்டோர் சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் தலைமையில் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக தேவப்பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக கேரளா மாநிலம் திருச்சூர் மாநிலத்தில் இருந்து நாராயணன் நம்பூதிரி தலைமையில் புரோகிதர்கள் 8 பேர் கோவிலில் உள்ள ஆனந்த கிருஷ்ணர் சன்னிதானத்திற்கு வருகை தந்து பிரசன்னம் பார்த்தனர் கும்பாபிஷேகம் என்று நடத்துவது என்பது குறித்த தேவப்பிரசன்னம் பார்க்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. தேவப்பிரசன்ன முடிவில் கும்பாபிஷேகம் என்று நடத்துவது என்பது குறித்த தேதி அறிவிக்கப்படும் என நம்பூதிரி தெரிவித்துள்ளார்
















