நந்தன் கால்வாய் திட்டம் விரைந்து முடிக்கTVK-சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டனஆர்ப்பாட்டம்

நந்தன் கால்வாய் திட்டம் விரைந்து முடிக்கக் கோரி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம்: நந்தன் கால்வாயை தென்பெண்ணை ஆற்றுடன் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக வெற்றி கழகத்தின் தென்மேற்கு மாவட்டச் சார்பில் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000, நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்குதல், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகரித்தல், நேமூர், ஈ.மண்டகப்பட்டு, ஈச்சங்குப்பம் ஏரியை நந்தன் கால்வாயுடன் இணைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு, வடிவேல் தலையில் நெல்லுக்கட்டுடன் வட்டாட்சியரை சந்தித்து, கோரிக்கைகள் தொடர்பான மனுவை அளித்தார்.

Exit mobile version