நடிகர் தனுஷின் 42வது பிறந்த பிறந்தநாளை முன்னிட்டு தரங்கம்பாடி அருகே ராஜூபுரம் மனிதநேய அரவணைப்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு அசைவ உணவு வழங்கி தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், பாடலாசிரியர்,என பன்முகத்தன்மையோடு வலம் வருபவர் தனுஷ். இவரின் 42 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் எட்வின்ராஜ், சிவா ஆகியோர் தலைமையில் தரங்கம்பாடி அருகே ராஜூபுரத்தில் உள்ள மனிதநேய அரவணைப்பு இல்லத்திற்கு சென்று அங்குள்ள 50 க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்கு கோழி மற்றும் முட்டையும் கூடிய அசைவ உணவை பரிமாறி அவர்களுடன் இணைந்து மதிய உணவு உண்டு பிறந்தநாளை கொண்டாடினார். இதில் ஒன்றிய பொருளாளர் சதிஷ் மற்றும் ரசிகர்மன்ற உறுப்பினர்கள் அவினாஷ், சந்தோஷ் ,ஆண்ட்ரோஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

