திருவாரூர் அருகே கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகம் – திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் பூண்டிகலைவாணன்

திருவாரூர் அருகே கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டிகலைவாணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை சார்பில் 6 ஆம் வகுப்பிலிருந்து 9 வது வகுப்பு பயிலும் மாணவ , மாணவிகளுக்கு
ரோபோடிக் மூலம் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கணிதம் உள்ளிட்ட பல்வேறு திறனை வளர்க்கும் விதமாக மாநிலத்தில் உள்ள 15 மேல்நிலைப் பள்ளிகளுக்கு எந்திரவியல் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது . அதில் ஒன்றாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவக்கப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூன்டி கலைவாணன் இணைந்து ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டனர்

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகப்பிரியா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜேஸ்வரி
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை திட்டஅலுவலர் சுரேஷ் , தலைமையாசிரியர் பூந்தமிழ்பாவை ,
அறிவியல் ஆசிரியர் சுகுணா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்,பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version