தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் ஸ்ரீ அமிரகடேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் ஆடிப்பூர மஹோற்சவ விழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் ஸ்ரீ அபிராமி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா காட்சி நடைபெற்று வந்த நிலையில் விழாவின் பத்தாம் திருநாளான இன்று தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியை முன்னிட்டு கோவில் தீர்த்த குளத்தின் முன்பாக ஸ்ரீஅபிராமி அம்மன், விநாயகர் சண்டிகேஸ்வரர்,சோமஸ்கந்தர் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருள செய்து தீர்த்த குளத்தில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீர்த்த வாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்
