திண்டிவனம் பாலியல் சீண்டல் உள்பட தமிழ்நாட்டில் பெருகிவரும் பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் வரும் 14-ம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் அண்மையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, திண்டிவனத்தில் பாலியல் சீண்டல், பெருகிவரும் போதைப்பொருள் கலாச்சாரம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு என திமுக அரச¤ன் செயல்பாடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி சார்பில் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளரும்., நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்குவார் என்றும் இபிஎஸ் கூறியுள்ளார்.


















