ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆடி செவ்வாய் கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தில் வாள் நெடுங்கண்ணி உடனாகிய தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. முற்கால சோழ மன்னர்களின் ஒருவரும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவருமான கோச்செங்கட் சோழ மன்னனால் அமைக்கப்பட்ட மாடக் கோயில்களில் ஒன்றான இக்கோவிலில் சுவாமி தானாக தோன்றியதால் தான்தோன்றிஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். பல்வேறு சிறப்புகளையுடைய இவ்வாலயத்தில் ஆடி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பெண்கள் திருவிளக்குகள் வைத்து உலக நன்மை வேண்டியும், தோஷங்கள் நீங்கிடவும், மாங்கல்ய பாக்கியம், குழந்தைபேறு, லட்சுமி கடாட்சத்துடன் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டி திருவிளக்கிற்கு மஞ்சள், குங்குமம், பூக்கள் உள்ளிட்ட மங்கள பொருட்களால் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.இத்திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்
