தளபதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, TVK கத்தார் நடத்திய “உயரம் விருதுகள் 2025” விழா மிகச் சிறப்பாகவும், மகிழ்ச்சிகரமாகவும் நடைபெற்றது.
கத்தாரில் உள்ள பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள், திறமைமிக்க இளம் சாதனையாளர்கள் மற்றும் மாணவர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் நடிகர் திரு. சௌந்தரராஜா, திருமதி பல்லவி வினோத்குமார் மற்றும் இந்திய சமூகத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை மேலும் மெருகூட்டினார்கள்.
அத்துடன், கத்தார் தமிழர்கள், தளபதி ரசிகர்கள் மற்றும் TVK சமூக ஊடக அமைப்பின் பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிகழ்ச்சியை உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடினார்கள்.
இசை, நடனம், கலாசார நிகழ்ச்சிகள் என கலந்து கொண்ட அனைவருக்கும் மறக்க முடியாத இனிய அனுபவமாக அமைந்தது.