மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு கிராமத்தில் ஸ்ரீ சௌந்தரநாயகி உடனாகிய ஸ்ரீ சங்காரண்யேஸ்வரர் சுவாமி ஆலயம் உள்ளது. மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மாடக் கோயில்களில் ஒன்றான இவ்வாலயத்தில்
விஷ்ணு சங்கினை பூஜித்து பெற்றார் என்று தல வரலாறு கூறுகிறது. பல்வேறு சிறப்புகளையுடைய இவ்வாலயத்தில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பல வண்ண நிறத்தில் 1008 வளையல்களில் வளையல் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
