நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயின் 51ஆவது பிறந்தநாளை தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் த வெ க கட்சி தொண்டர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில்,தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிறந்தநாளை ஒட்டி, வெளிநாட்டில் வசிக்கும் ரசிகர்களின் சார்பாக, என்.ஆர்.ஐ. சமூக ஊடகப் பிரிவு “வெற்றித் தளபதி பாடல்” என்ற சிறப்பு பாடலை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் வாழும் விஜய் ரசிகர்களின் உற்சாகத்தையும், வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் மனக்குரலையும் பிரதிபலிக்கும் விதமாக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் சமூக ஊடகங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.