திமுக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அறிவித்தவாறு 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்:- தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாநில தலைவர் மாணிக்கம் மயிலாடுதுறையில் பேட்டி:-
மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் 45-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆண்டு பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சங்கத்தின் மாநில தலைவர் மாணிக்கம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில தலைவர் மாணிக்கம் கூறுகையில், ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2.50 லட்சமாக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும், கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக அறிவித்தவாறு மாநில அரசு ஓய்வூதியர்களுக்கு 70 வயது நிறைவடையும் போது அவர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம், 10 சதவீத கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவதைப் போன்று ரூ.1000 மருத்துவப்படி, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆகியவற்றை தமிழக அரசும் வழங்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில், 22 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், ஓய்வு பெற்ற அலுவலர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.