தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது.தருமபுரி மாவட்டத்தில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னையில் பகல் வேளையில் விட்டுவிட்டு மழை பெய்த நிலையில், நள்ளிரவிலும் சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், திருத்தணி, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, ஆர்.கே பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மழை நீருடன் கழிவு நீர் கலந்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு 9 ஆயிரம் கன அடியில் இருந்து, 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, வௌ¢ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
