டிரம்ப் – புடின் பேச்சு தோல்வியடைந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரி: அமெரிக்கா

அலாஸ்காவில் நடக்கும் டிரம்ப் – புடின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் இந்தியாவுக்கு கூடுதலாக மீண்டும் வரிவிதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்து உள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீ த வரி விதித்தது. மேலும்இ உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால்இ இந்தியா மீதான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

இதனிடையேஇ உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் – ரஷ்ய அதிபர் புடின் இடையே ச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது. இது சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால்இ ரஷ்யா கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என டிரம்ப் எச்சரித்து இருந்தார்.

Exit mobile version