விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலர் தொடு வியாபாரிகள் சார்பில் செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு 37 -ஆம் ஆண்டு ஆடிபூரத்தை முன்னிட்டு பூ பல்லக்கு பெருவிழா நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு மூலவர் ஸ்ரீ மாரியம்மனுககு பால் தயிர் சந்தனம் விபதி,பன்னீர்,தேன், பஞ்சாமிர்தம் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து 9 மணிக்கு செஞ்சி அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் இருந்து அக்னி சட்டி ஊர்வலமும், 10 மணிக்கு அங்காளம்மன் ஆலயத்தில் இருந்து 108 பால்குடம் ஊர்வலமாக கொண்டு வந்து மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது .
தொடர்ந்து மாலை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜைகளும் நடைபெற்றது .
இதையடுத்து இரவு 10 மணிக்கு விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் முருகருக்கு பலவித மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூப்பல்லக்கு ரதத்தில் எழுந்தருளினர்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை கட்டப்பட்டு மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் பூப்பல்லக்கு வீதி உலா காட்சி நடைபெற்றது.
இதில் செஞ்சி மலர் தொடு வியாபாரிகள் மற்றும் கிருஷ்ணாபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பூப்பல்லாக்கு திருவிழாவை முன்னிட்டு செஞ்சி காந்தி பஜார்,மற்றும் திருக்கோவிலில் எதிரே அமைந்துள்ள குளத்திலும், வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு மின் ஒளி விளக்கில் ஜொலித்த ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா …
இந்நிகழ்ச்சியில் செஞ்சி நகரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
