சீர்காழி திட்டு கிராமங்களை சூழ்ந்த வெள்ளநீர் விவசாயிகள் வேதனை

மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி மேட்டூர் அணைக்கு வருகின்ற மழைநீர் முழுவதுமாக காவிரி ஆற்றில் வெளியேற்றி வருகின்றனர். கடந்த சில தினங்களாக 1 லட்சம் கன அடிக்கு மேல் உபரிநீர் கல்லணை மற்றும் கீழணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.தற்போது மேட்டூர் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

இன் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளமணல் உள்ளிட்ட கரையோர கிராமங்களில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை உபரி நீர் சூழ்ந்த நிலையில் தற்போது மேலிருந்து வரக்கூடிய உபரி நீர்ன் அளவு குறைந்துள்ளதால் திட்டு கிராமங்களை சூழ்ந்த உபரி நீர் வடியத்தொடங்கி உள்ளது.

மேலும் நாதல் படுகையில் 50 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள தோட்டப்பயிர்களான பருத்தி, வாழை, மரவள்ளிக்கிழங்கு, கத்திரி, வெண்டை,கீரை மற்றும் பூச்செடிகளை உபரி நீர் தேங்கியுள்ளது. இரண்டு நாட்களாக நீரில் மூழ்கி இருந்த கீரை வகைகள் தற்போது அழுகத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் இது குறித்து பேசிய பெண் விவசாயி ஒவ்வொரு ஆண்டும் இதே போல் உபரி நீர் திறக்கப்பட்டு வீடுகளும் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது கடன் வாங்கி விவசாயம் செய்தாலும் அறுவடை செய்யும் நேரத்தில் நீர்ல் மூழ்கி பாதிப்படுகிறது இதனால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகிறது.

விவசாயத்தை தவிர வேறு எந்த வேலையும் எங்களுக்கு தெரியாது எங்களை வெளியேற்ற முயற்சி செய்கின்றனர்.பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு நிவாரணம் வழங்குவதை விட எங்களின் நீண்ட நாள் கோரிக்கையும் நிரந்தர தீர்வும் மன திட்டு கிராமங்களை சுற்றி கருங்கல் சுவர்கள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Exit mobile version