மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட நான்கு வழிச்சாலையோரம் பனமங்கலம் வடக்கு தெரு செல்லும் சாலையில் குப்பை,மற்றும் கழிவுகளை கொட்டிய லாரியை சிறைபிடித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனரர்.தொடர்ச்சியாக .இரவு நேரங்களில் இந்த மருத்துவ கழிவு, செப்டிக் டேங்க் கழிவு நீர்,குப்பை கழிவுகள், இறைச்சி கழிவுகள், இறந்த கால்நடைகள் உடல்களை போடுவதால் துர்நாற்றம் வீசுகிறது.இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிறமத்துடனே கடந்து செல்கின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே கழிவுகளை கொட்டுவதால் வீடுகளில் கடும் துர்நாற்றத்துடன் ஈக்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது, பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தனியார் குப்பை கழிவுகள் கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்று தனியார் லாரியில் கொண்டு வந்து குப்பை கழிவுகளை கொட்டிய போது அப்பகுதி மக்கள் லாரியை சிறைபித்தனர்.தகவல் அறிந்து வந்த போலிசார் லாரியை மீட்டு காவல்நிலையம் கொண்டு சென்றனர்.மேலும் நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் குப்பை கழிவுகள் கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி அருகே பனமங்கலத்தில் குடியிருப்பு அருகே குப்பை, கழிவுகளை கொட்டிய லாரியை சிறைபிடித்த கிராமமக்கள்
-
By Satheesa

- Categories: News
- Tags: district newstamilnadu
Related Content
Today Headlines | தலைப்புச் செய்திகள் - 08 August 2025 | Retro tamil
By
Divya
August 8, 2025
கணவரைக் கொன்ற மனைவி – காதலனுடன் சேர்ந்து கொடூரம்!
By
Divya
August 8, 2025
'கலைஞரின் கனவு இல்லம்' திட்ட வீடு ரத்து – ஐகோர்ட்டில் கடும் விமர்சனம்
By
Divya
August 8, 2025
பட்டியலின - பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமை.. முதலிடத்தில் உ.பி.!
By
Divya
August 8, 2025