சீர்காழியில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நூதனக் கண்டன ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நூதனக் கண்டன ஆர்ப்பாட்டம். கை, கால்களில் ரத்தக்காயங்களுடன் கட்டுகள் கட்டிக் கொண்டும், எலும்புகள் உடைந்தது போன்று ஸ்டெக்க்சரில் படுத்துக்கொண்டும்,சக்கர நாற்காலியில் அமர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை தமிழீழ மண்ணில் செம்மணி என்கிற இடத்தில் மனித புதைகுழி கண்டெடுக்கப்பட்டது.அந்த புதைகுழியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடைய எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டது இதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில்
டெல்டா மண்டல செயலாளர் சீர்காழி பெரியார் செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும், ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என கூறியும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலை என்று தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் தமிழ் ஈழத்திற்கு பொது பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கை கால்களில் ரத்த காயங்கள் ஏற்பட்டது போன்று கட்டிகள் கட்டிக் கொண்டும் கை கால்கள் சிதைந்தது ஒன்று ஸ்ட்ரக்சரின் படுத்தும் சக்கர நாற்காலியில் அமர்ந்தும் போராட்டத்தில் பங்கேற்றது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததோடு, பரிதாபமாக அமைந்தது.

Exit mobile version