மயிலாடுதுறை அருகே சித்தர் காட்டில் அரசு நவீன அரிசி ஆலையை இயக்க மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடையை மீறி ஆலையை இயக்கும் நிர்வாகத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர் காட்டில் அரசு நவீன அரிசி ஆலை இயங்கி வருகிறது நெருக்கமான மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகளுக்கு நடுவே தொழிற்சாலை அமைத்து அரிசி ஆலை இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டால் இப்பகுதியை சுற்றியுள்ள பலர் புற்றுநோய் இதய நோய் சுவாச கோளாறு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு உயிரிழந்ததாக குற்றம்சாட்டி ஆலையை எதிர்த்து பல ஆண்டுகளாக பொதுமக்கள் அறவழிப் போராட்டம் செய்து 2010 ஆம் ஆண்டு ஆலையை மூட வேண்டும் என்ற நீதிமன்ற ஆணையை சட்டப் போராட்டத்திற்கு பிறகு பெற்ற நிலையில் 2017 வரை ஆலை இயங்காமல் இருந்து வந்தது. அதன் பின்பு அவ்வப்போது நீதிமன்ற ஆணைக்கு புறம்பாக இயங்கிக் கொண்டுள்ளது இதனை அடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி இறுதியாக சுடுகாட்டில் குடியேறி உண்டு உறங்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு அரிசி ஆலை நிறுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் இன்று எவ்வித முன்னறிவிப்புமின்றி ஆளை இயக்கப்பட்டு கறி துகள்கள் நாலா புறமும் பரவியது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி ஆலையை இயக்க உத்தரவிட்ட நிர்வாக அதிகாரி மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்ற தீர்ப்பின்படி ஆலையை உடனடியாக நிரந்தரமாக மூடி மின் இணைப்பை துண்டிக்கவும் மருத்துவக் குழு ஆய்வு செய்து உயிரிழந்த மற்றும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் ஶ்ரீகாந்திடம் அளித்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்றால் மீண்டும் தீவிரமான போராட்டத்திற்கு தள்ளப்படுவோம் எனவும் தெரிவித்துள்ளனர். கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பேட்டி வசந்த் பொதுமக்கள்
