கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 42 சதவீதம் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது – கன்னியாகுமரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு மன்றம் துவங்க விழாவில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பேட்டி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு சிறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை உள்ளடக்கிய சாலை பாதுகாப்பு மன்றம் துவங்கப்பட்டுள்ளது , இதில் மாவட்ட முழுவதும் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளை இணைத்து அவர்கள் மூலம் சாலை பாதுகாப்பு சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது , அந்த வகையில் கன்னியாகுமரி காவல் சரகத்திற்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை இந்த மன்றத்தில் இணைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கூறுகையில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 47 சதவீதம் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது , கடந்த ஆண்டு 199 விபத்துக்கள் நடந்தது தற்போது வரை 103 விபத்துக்கள் தான் பதிவாகியுள்ளது.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் மூலம் பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதன் மூலம் விபத்தில்லா கன்னியாகுமரி உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்
