மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மருத்துவமனையில் இன்று குத்தாலம் அரசு மருத்துவமனை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. தனியார் தொண்டு நிறுவனத்தின் தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான கர்ப்பிணி தாய்மார்கள் கலந்துகொண்டு ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை வாங்கிச் சென்றனர். மேலும் பச்சிளம் குழந்தைகளுக்கு உன்னத உணவான தாய்ப்பாலின் மகத்துவம் மற்றும் அதன் சிறப்பு குறித்தும் பேசினர். அப்போது தலைமை மருத்துவர் ஜான்சிராணி, மகப்பேறு மருத்துவர் ஷாஹினா பர்வீன், மயக்கவியல் நிபுணர் ஹரிணி,மருத்துவர் சண்முகப்பிரியா உள்ளிட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
