காட்டுச்சேரியில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் தரங்கம்பாடி குறுவட்ட அளவிலான தடகளப்போட்டி 

தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரியில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் தரங்கம்பாடி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டி இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் 100 பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்பு. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுகா சமத்துவபுரம் விளையாட்டு அரங்கத்தில் அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் தரங்கம்பாடி குறுவட்ட அளவிலான 100 பள்ளிகள் பங்கேற்கும் தடகளப்போட்டி இன்று தொடங்கியது ஆக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெறம் இப்போட்டியில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற உள்ளது.

தரங்கம்பாடி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு போட்டியினை துவங்கி வைத்து இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றுகளை வழங்கினார்.

மேலும் இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிகள் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version