மயிலாடுதுறை அருகே கருவிழந்தநாதபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா ; சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை தூக்கிக் கொண்டும் ஏராளமான பக்தர்கள் தீமித்தது நேர்த்திகடன் செலுத்தியது காண்போரை பக்திபரவசத்தில் ஆழ்த்தியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவிழந்தநாதபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் 3 வந்து வெள்ளிக்கிழமையில் ஆண்டு தோறும் தீமிதி திருவிழா நடைபெறுது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த மாதம் 18 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான மூன்றாவது வெள்ளி கிழமையான இன்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காவிரி கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டு காப்பு கட்டி விரதம் இருந்த மஞ்சள் உடை உடுத்திய பக்தர்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் சக்தி கரகம் இறங்கியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் அலகு காவடி எடுத்த பக்தர்கள் தீமித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை தூக்கிக் கொண்டும் பக்தர்கள் தீமித்தது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. கருவிழநூநாதபுரம் இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் என ஆயிரக்கணக்கானோ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
