கன்னியாகுமரி பிரசித்தி பெற்ற முப்பந்தல் ஆல மூடு இசக்கி அம்மன் கோவிலில் ஆடி மாத பூக்குழி கொடை விழா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முப்பந்தல் ஆல மூடு இசக்கி அம்மன் கோவிலில் ஆடி மாத பூக்குழி கொடை விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தங்கள் உடம்பில் வேல் குத்தியும் நேர்ச்சைக்காக பறக்கும் காவடி எடுத்தும் வழிபட்டனர் கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் ஆலமூடு இசக்கி அம்மன் கோவில் பூக்குழி கொடை விழாவை முன்னிட்டு ஆரல்வாய்மொழி அகலிகை ஊற்று பிள்ளையார் கோவில் முன்பு இருந்து பூக்கர கம், அபிஷேகக் குடங்கள் முளைப்பாரி, வேல் குத்தி, பறக்கும் காவடி மற்றும் மேளதாளங்களுடன் பக்தர்கள் முப்பந்தல் ஆல மூடு இசக்கி அம்மன் கோவில் நோக்கி சென்றனர். இந்த ஊர்வலத்தை முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என் தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், முப்பந்தல் ஆல மூடு இசக்கி அம்மன் கோவில் டிரஸ்ட் தலைவர் டாக்டர் அருணாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர

Exit mobile version