கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம். அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமிவிவே கானந்தர் நினைவு மண்ட பம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலம் ஆகிய வற்றை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப் பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்துகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகா னந்தா ஆகிய 3 படகுகள் தினமும் காலை 8 மணி இயக்கப்பட்டுகின்றன. முதல் மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக இந்த படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த படகில் பயணம் செய்வதற்கு நபர் ஒருவருக்கு ரூ.100ம், கியூவில் காத்து நிற்காமல் நேரடியாக செல்வதற்கு ரூ.300 வீதமும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறதுசீசன் மற்றும் பண்டிகை கால தொடர்விடுமுறை நாட்கள், வாரத்தின் இறுதி நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பய பயணிகள் படகில் பயணம் செய்கிறார்கள்.இதனால் சுற்றுலா பய ணிகள் கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் பல மணி நேரம் காத்திருந்து அவதிப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.இந்த நிலையை போக்குவதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ஆன் லைன் டிக்கெட் முறையை இன்று முதல் அறிமுகப்ப டுத்த உள்ளது.இந்த ஆன்லைன் டிக் கெட் வசதியை அமைச்சர் மனோதங்கராஜ் துவக்கி வைத்தார். ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யும் நிகழ்ச்சி துவக்க விழாவில் குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா, மாநில உணவுக் கழக தலைவர் சுரேஷ் ராஜன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கன்னியாகுமரி பூம்பு கார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் முருகபூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்