கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைகுளம் அருகே புவியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 60 ). 41 ஆண்டுகளுக்கு முன்பு காவலராக காவல் துறையில் பணிக்கு சேர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று கோட்டார் போக்குவரத்து காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்தார் இந்நிலையில் இன்று அவர் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்றார். வழக்கமாக ஒருவர் ஓய்வு பெறும்போது அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தி அவரை தங்கள் துறை வாகனத்தில் கௌரவமாக வீட்டிற்கு சக ஊழியர்களும் அதிகாரிகளும் அழைத்துச் செல்வது வழக்கம் ஆனால் இன்று பாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் பிரிவு உபசார விழா முடிந்தவுடன் அங்கிருந்து சுமார் 17– கிலோ மீட்டர் தூரம் ஓடி தனது வீட்டை அடைந்தார் இந்த வினோத முடிவுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தான் காரணம் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இளைஞர்களிடையே ஏற்படுத்தி வரும் போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஒட்டி, இளைஞர்கள் போதை பொருட்களை பயன்படுத்தாமல் உடலை உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தனது ஆரோக்கியத்தையும் பாதுகாத்து கொண்டு பெற்றோரையும் பாதுகாக்க வேண்டும் என இளைஞர்களை மன்றாடி பணிவோடு வேண்டுவதாகவும் அதற்கான விழிப்புணர்வு ஓட்டத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார். இவரது இந்த வினோத முயற்சிக்கு பொதுமக்களின் பாராட்டுக்கள் குவிகின்றன.
ஓய்வு பெற்ற காவலர் 17 கிலோ மீட்டர் ஓடி போதைக்கு எதிரான விழிப்புணர்வு
-
By Satheesa

- Categories: News
- Tags: district newstamilnadu
Related Content
புதுப்பட்டினம் கடைவீதியில் ஏற்பட்ட தீ விபத்து
By
Satheesa
August 2, 2025
மருத்துவ&மக்கள் நலவாழ்வுதுறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் துவக்கி வைத்தனர்
By
Satheesa
August 2, 2025
தலைமை மீனவ கிராமமான கடைவீதியில் உண்ணாவிரத போராட்டம்
By
Satheesa
August 2, 2025
கருவிழந்தநாதபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
By
Satheesa
August 2, 2025