குத்தாலம் அருகே ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா , கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் தீமித்து சுவாமி தரிசனம் செய்தனர் :-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வில்லியநல்லூர் கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமசியாக இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த நான்காம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து சக்தி கரகம் தலையில் சுமந்து அலங்கார காவடி, கூண்டு காவடி மற்றும் ஏராளமான பக்தர்கள் மேல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள் கொட்டும் மழையிலும் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தீமிதி விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.