ஊர்புற நூலகர்கள் தரம் உயர்த்த கோரி உண்ணாவிரத போராட்டம் – 10 மாவட்டங்களை சேர்ந்த நூலகர்கள் கலந்து கொண்டு போராட்டம்.
விழுப்புரம்:
தமிழ்நாடு பொது நலத்துறை ஒருங்கிணைந்த ஊர் புற நூலகர்கள், விழுப்புரம் மண்டலம் சார்பில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடல் மைதானத்தில் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊர் புற நூலகர்களை தரம் உயர்த்துதல் மற்றும் தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 178ஐ நடைமுறைப்படுத்துதல் என்பதையே பிரதான கோரிக்கையாக முன்வைத்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த நூலகர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
இவ்வேளையில், “இந்த போராட்டம் அரசு கவனத்திற்கு வராமல் செல்லும் பட்சத்தில், அடுத்த கட்டமாக சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நூலகப் பணியாளர்களின் பேட்டி உள்ளது