உலக யானைகள் தினம் திருக்கடையூர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பாசமுடன் வாழ்த்து யானையும் மகிழ்ச்சி

உலக யானைகள் தினம் திருக்கடையூர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பழங்கள் காய்கறிகள் கொடுக்கப்பட்டது பக்தர்கள் பாசமுடன் யானைக்கு க கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர் அதற்கு யானையும் தும்பிக்கையால் மகிழ்ச்சி தெரிவித்தது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் யானை அபிராமிக்கு இன்று உலக யானைகள் தினத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள் செய்து மாலை அணிவித்து காய்கறிகள் பழங்கள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது இதில் பக்தர்கள் கலந்து கொண்டு யானையுடன் செல்பி எடுத்தும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சி தெரிவித்தனர் பக்தர்கள் காய்கறிகளையும் வழங்கினர் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜை செய்து கோவில யானை அபிராமிக்கு பிரசாதங்கள் வழங்கி தீபம் ஏற்றி காண்பித்தனர் கோவில் நிர்வாகம் மற்றும் குருக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version