ஆட்டம் பாட்டத்துடன் பொங்கலை கொண்டாடிய தூய்மை பணியாளர்கள்

வடசென்னை 37 ஆவது வார்டில் மாமன்ற உறுப்பினர் டில்லி பாபு அவர்கள் தலைமையில் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கலை தூய்மை பணியாளர்கள் கொண்டாடினர்.

வடசென்னை எம் கே பி நகர் பகுதியில் அமைந்துள்ள 37-வது வார்ட் மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர் டில்லி பாபு அவர்களின் தலைமையில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இந்த விழாவில் 37 வது வார்டு பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கு பொங்கல் பரிசுகள் புடவை அரிசி மற்றும் சில்வர் பாத்திரங்கள் என பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன

இந்த நிகழ்ச்சியின் போது தூய்மை பணியாளர்கள் பாடலுக்கு ஏற்றார் போல மகிழ்ச்சியுடன் நடனமாடி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்

இந்த நிகழ்ச்சி தங்களுக்கு மகிழ்ச்சியான விழாவாக அமைந்துள்ளதாகவும் ஆம் என்ற உறுப்பினர் அவர்கள் தங்களை தங்கள் உடன் பிறந்தார் போல கவனித்துக் கொள்வதாகவும் அவர்கள் கூறினர் அத்துடன் தூய்மை பணி ஆளர்களோடு சேர்ந்து மாமன்றஉறுப்பினரும் நடனமாடி பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியுடன் அனைவரும் கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்தார்

Exit mobile version