செல்வபெருந்தகைக்கு இது தேவை தானா..?

பெரம்பலூரில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கண்டித்து அதிமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது செல்வ பெருந்தகையின் உருவப்படத்தை செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவதூறாக பேசியதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் அதன் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு செல்வபெருந்தகைக்கு எதிராக கோஷமிட்டனர். அதனைத் தொடர்ந்து செல்லபெருந்தகையின் உருவப் படத்தை செருப்பால் அடித்தும் பின்னர் தீயிட்டுக் எரித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துனர். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Exit mobile version