குமரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக குளங்களிலிருந்து வண்டல் மண் எடுக்க வழங்கப்படும் அனுமதியை சட்டவிரோதமாக பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனித பாதுகாப்பு கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1500 க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்களை தூர்வாரும் நோக்கத்தோடு விவசாயிகள் பயன்பெறும் வகையில் வண்டல் மண் எடுத்து விளைநிலங்களுக்கு இலவசமாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது , இந்த அனுமதியை பயன்படுத்தி சட்ட விரோதமாக குளங்களிலிருந்து அளவுக்கு அதிகமாக மணல் அள்ளி விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது இந்த நிலையில் குளங்களிலிருந்து எடுக்கும் மண்ணை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வண்டல் மண் எடுக்கும் அனுமதியை சட்டவிரோதமாக பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனித பாதுகாப்பு கழகம் சார்பில் மாநில தலைவர் ஜெய் மோகன் தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் உஷா மற்றும் மாவட்ட செயலாளர் ஜான் வின்சென்ட் மாநில அமைப்பாளர் ராஜ், மாநகரச் செயலாளர் ஜெகன் மாநில அமைப்பாளர் சார்லின் கழக பேச்சாளர் அமலன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
