விழுப்புரத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை யொட்டி வீரவாழி யம்மன் கோவிலில் சாகை வார்த்தல் (கூழ் வார்த்தல்) வெகு சிறப்பாக நடைபெற்றது
விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் விழுப்புரம் – பாண்டி சாலையில் அமைந்துள்ளது.பழமை வாய்ந்த வீரவாழியம்மன் கோவில் இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையில் சாகை வார்த்தல் (கூழ் ஊர்று தல்)வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு முதல் வெள்ளிக் கிழமையான இன்று சாகை வார்த்தல் (கூழ் ஊர்றுதல்) வெகு சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பூங் கரகம் ஊர்வலமாக எடுத்து வந்து சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த வீர வாழியம்மனுக்கு தீபாராதனை செய்து சாகை வார்த்தல் (கூழ் வார்த்தல்)வெகு சிறப்பாக நடைபெற்றது.இதில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் இரவு கும்பம் வார்த்தல்,அம்மன் பக்தி பாடல்களின் இன்னிசை கச்சேரியும் மற்றும் அம்மன் வீதிவுலாவும் நடைபெறும்.
