வடகிழக்கு பருவமழையையொட்டி விழுப்புரத்தில் கோலியனூரான் வாய்க்கால் தூர்வாரும் பணியை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க உத்தரவு. பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்
விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி நீர்பாசன வாய்க்கால் மற்றும் ஏரி, குளங்களுக்கு செல்லக்கூடிய வரத்துவாய்க்கால், மழைநீர் செல்லக்வடிய வாய்க்கால்கள் தூர்வார உத்தரவிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக விழுப்புரம் நகரில் பிரதான வாய்க்காலான கோலியனூரான் வாய்க்காலை தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
விழுப்புரம் நகரில் மழைநீர், சாக்கடைநீரை வெளியேற்றும் முக்கிய வாய்க்காலான கோலியனூரான் வாய்க்காலில் அவ்வபோது குப்பைகள், பிளாஸ்டிக் கொட்டப்படுவதால் துர்ந்து தண்ணீர்செல்லாத நிலை ஏற்படுகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழையையொட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மகாராஜபுரம் பகுதியில் ஆய்வுமேற்கொண்ட அவர் எத்தனை நாட்களாக பணிகள் நடக்கிறது, எவ்வளவு ஆழம் தூர்வாரப்படுகிறது என்ற விவரங்களை நகராட்சி ஆணையர் வசந்தியிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து இந்த பணிகளை அரசாணையில் உள்ளவாறு வாய்க்கால்தூர்வாரி விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென உத்தரவிட்டார் அப்பொழுது அங்கு வந்த அப்பகுதியில் சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.