மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஆடி மாத பால்குட திருவிழா;

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை கிராமத்தில் கன்னிகா பரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. கிராம மக்களின் குலதெய்வமான இக்கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமையான இன்று பால்குடம் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, விரதம் இருந்த பக்தர்கள், கிராம எல்லையில் இருந்து பால்குடம் எடுத்து கிராம வீதிகளை சுற்றி வந்து கோயிலை அடைந்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Exit mobile version