பொய்கைகுடி கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 5வயது சிறுமி உயிர் இழப்பு ஆறுதல் கூறி நிவாரணவழங்கிய பூம்புகார் MLA

மயிலாடுதுறை அருகே பொய்கைகுடி கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 5வயது சிறுமி உயிர் இழப்பு ஆறுதல் குறி நிவாரண வழங்கிய பூம்புகார் எம் எல் ஏ.

மயிலாடுதுறை மாவட்டம் காளி ஊராட்சி பொய்கைகுடி கிராமத்தில் காமராஜர் – சரண்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். காமராஜர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சாஷா(8), சஹானாஸ்ரீ (5) என இரண்டு பெண்பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் 5 வயது இளைய‌மகள் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி சஹானாஸ்ரீ வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது ‌வீட்டின் உட்புறம் நடுவில் உள்ள 7 அடி உயரம் சுவர் இடிந்து விளையாடி கொண்டிருந்த சிறுமி மீது விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கி சிறுமி அங்கேயே உயிரிழந்தார். தகவலறிந்து மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பூம்புக சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் .முருகன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் இமய நாதன் , ராஜா பஞ்சு குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் காந்தி மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Exit mobile version