மயிலாடுதுறையில் தனியார் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவனின் காலில் மூன்று விரல்கள் துண்டிப்பு; மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மங்கைநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் பரணி (17). மயிலாடுதுறையில் தனியார் கல்லூரி ஒன்றில் (தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி) முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு தனியார் பேருந்து மூலம் மயிலாடுதுறைக்கு பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்து வந்துள்ளார். வழியில் சீனிவாசபுரம் என்ற இடத்தில் வரும்போது, பேருந்து சாலையில் உள்ள ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கும் போது சாலையில் மோதியதில் மாணவனின் காலில் மூன்று விரல்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மாணவனின் அலறல் சத்தம் கேட்டு பேருந்தை நிறுத்திய நடத்துனர், மாணவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மாணவனுக்கு ஆபரேஷன் நடைபெற்று தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
