திருவாதிரை விரதம் எப்படி இருக்க வேண்டும் ?

மார்கழி திருவாதிரையில் மாங்கல்ய பலத்திற்காக பெண்கள் இந்த விரதத்தை இருப்பது தமிழகத்தின் பல பகுதிகளில் மிக விசேஷமான, கன்னிப் பெண்கள் பலரும் நல்ல கணவர் அமைய, மங்கலகரமான வாழ்வு அமைய திருவாதிரை விரதம் மேற்கொள்கிறார்கள்

மார்கழி மாதம் திருவாதிரை நாளில் கடைபிடிக்கப்படுவது திருவாதிரை விரதம். இதை மாங்கல்ய விரதம் என்றும் சொல்வதுண்டு. கணவரின் ஆயுள் நீடிக்க, கணவரின் தொழில் சிறக்க, வீட்டில் ஒற்றுமை, சந்தோஷம் தங்க பெண்கள் இருக்கும் முக்கியமான விரதம் இந்த திருவாதிரை விரதம். வரலட்சுமி நோன்பிற்கு இணையாக விரதம்

விரத முறை

  1. திருவாதிரை விரதம் இருக்கும் பெண்கள் அதிகாலையில் எழுந்து, நீராட வேண்டும்.

2. கண்டிப்பாக மஞ்சள் பூசி, தலையில் எண்ணெய் சீகைக்காய் வைத்து நீராட வேண்டும்.

3. வீட்டில் விளக்கேற்றி வழிபட்ட பிறகு, கணவரிடம் ஆசி பெற்று விரதத்தை துவக்கவேண்டும்.

4. நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பகல்பொழுதில் உணவை தவிர்க்க வேண்டும்.

5. மாலையில் அதிகபட்சமாக 21, குறைந்த பட்சமாக 7 என கணக்கில் அல்லது எத்தனை முடிகிறதோ அத்தனை வகை காய்கறிகளால் சமையல் அதிரசம், வடை போன்றவைகளை சுவாமிக்கு படைக்க வேண்டும்.

6. பூஜை முடித்த பிறகு அன்னதானம் வழங்கிய பிறகு, நாமும் உணவு சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

7. வீட்டில் உள்ள பெரியவர்கள், கணவரிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.

8. திருவாதிரை விரதம் இருக்கும் பெண்கள் தாலி சரடு மாற்றி, புதிய சரடு அணிந்து கொள்ளலாம்.

9. தாலி சரடு மாற்றுபவர்கள் காலை 10.20 மணிக்குள் மாற்ற வேண்டும். திருவாதிரை வருவதால் ராகு காலம் துவங்குவதற்கு முன் மாற்றிக் கொள்ளலாம். தாலி சரடு காலையில் தான் மாற்ற வேண்டும். மாலையில் மாற்றக் கூடாது

10. திருவாதிரை களி படைப்பவர்கள் சுவாமிக்கு படைத்து வழிபட வேண்டும்.

திருமணமான பெண்கள் மட்டுமின்றி கன்னிப்பெண்களும் இந்த விரதம் மேற்கொள்ளலாம். திருவாதிரை விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.





Exit mobile version