மயிலாடுதுறை அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட அரசு வீடு இடிந்து விழுந்ததில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு நீதி கேட்டு வி.சி.க. ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த காளி கிராமத்தில் கடந்த மாதம் பணிகள் நடைபெற்று வந்த அரசு வீடு இடிந்து விழுந்ததில்,
சகானா என்ற சிறுமி கட்டட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட அரசு வீடு இடிந்து விழுந்ததில் பலியான சிறுமியின் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும், காலை ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் அனைத்து அரசு வீடுகளையும் உயர் மட்ட குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும், தரமற்ற முறையில் வீடு கட்டுவதற்கு உடனடியாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காளி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட முன்னாள் செயலாளர் ஈழவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது கிராம மக்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
