தொடரும் அகதிகள் படகு விபத்து – கிரீஸ் கடலில் 18 பேர் பலி

கிரீஸ் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில், புலம்பெயர் தொழிலாளர்கள் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் வறுமை மற்றும் மோதல் காரணமாக, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்களின் படகுகள், விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், கிரீஸ் அருகே கிரீட் தீவின் தெற்கே, மத்திய தரைக் கடல் பகுதியில், புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற படகு, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 18 பேர் உயிரிழந்தனர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக, கடலோர காவல் படையினர் தெரிவித்தனர். கடுமையான புயல் காற்றின் காரணமாக, படகு கட்டுப்பாட்டை இழந்ததாகவும், அதன்பிறகு கடலில் மூழ்கியதாகவும், உயிருடன் மீட்கப்பட்டவர்கள், மீட்பு குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version